பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் அதிரடியால் மரணத்தின் நகரமானதா பிலிப்பைன்ஸ்?

பிலிப்பைன்ஸின் ஜனாதிபதியாக சுமார் பத்து மாதங்களிற்கு முன்னர் ரொட்ரிகோ டட்டர்டே (Rodrigo Duterte) பதவியேற்றதுடன் தனது நாட்டை போதைப்பொருளிற்கு எதிரான போர்களமாக மாற்றினார்.

அதன் பின்னர் பிலிப்பைன்ஸில் கொலை செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்தது எனலாம்..

இது தலைநகர் மனிலாவில் உள்ள சன்டோ நினோ (Santo Niño) என்ற பகுதியின் கதை எனலாம்…

இந்த பகுதியில் பல அதிர்ச்சியூட்டும் கொலைகள் இடம்பெற்றுள்ளன.

மரியா முசாபியா (Maria Musabia) இரு பிரேதப்பெட்டிகளிற்கு பின்னால் மெதுவாக நடந்துசெல்கின்றார். விலைமலிவான பிரேதப்பெட்டிகள் அதில் ஓன்று மிகச்சிறியது.

அந்த வயோதிபப்பெண்மணி தனது கண்களை துடைத்துக்கொள்கின்றார்,பிரேதப்பெட்டி இறுதியாக ஓரு தடவை திறக்கப்படுகின்றது- அவர் அவர்களை பார்ப்பது இதுவே இறுதி தடவை.

death-city05

kilaviiஅதில் காணப்படும் சடலங்களில் ஓன்று ஐந்து வயது குழந்தையுனுடையது. மற்றையது 44 வயது தந்தையினுடையது.

அவர் போதைப்பொருள் வியாபாரி என குற்றம்சாட்டப்பட்டு வீட்டில் வைத்து கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தினர் அதனை மறுக்கின்றனர்.

மனிலாவில் உள்ள பசாய் நகரின் மிகவும் வறிய பகுதியான சன்டோ நினோவில் வேலைவாய்ப்பு என்பது அங்கு மிகவும் கடினமான விடயம். மக்கள் மிக மோசமான சுகாதார நிலையில் வாழ்கின்றனர் என்பது துன்பியலே..

இங்கு கொலைகள் ஆரம்பமான தருணத்தில் செய்தியாளர் ஒருவர் இந்த இடத்தை மரணித்தவர்களின் நகரம் என வர்ணித்தார்.

death-city06

இந்த பகுதியிலேயே மேலே குறிப்பிடப்பட்ட ஐந்து வயது சிறுவனும் அவனது தந்தையும் கொல்லப்பட்டனர். தனது கணவனையும் மகனையும் இழந்த கர்ப்பிணியான அந்த பெண்மணி என்ன நடந்தது என்பதை இவ்வாறு வர்ணிக்கின்றார்.

கிறிஸ்மஸ் தினத்திற்கு சில நாட்களிற்கு முன்னர்-மாலை எனது கணவர் தனது டிவிடியை திருத்திக்கொண்டிருந்தார். இருட்டிலிருந்து துப்பாக்கி வேட்டுகள் வீட்டை தாக்கின, எனது மகனும் கணவரும் கொல்லப்பட்டனர் என்கிறார் அவர்.

கடந்த ஆறு மாதங்களில் பிலிப்பைன்ஸ் சந்தித்துள்ள 7500 போதைப்பொருள் எதிர்ப்பு கொலைகளில் இவையுமொன்று என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த கொலைகளின் புள்ளிவிபரத் தரவுகளை பிலிப்பைன்ஸ் பொலிஸாரே வெளியிட்டுள்ளனர்.

மேலும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி முன்னெடுத்துள்ள போதைப்பொருளிற்கு எதிரான யுத்தமே இந்த கொலைகளிற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

death-city04

ஜனாதிபதி சட்டமொழுங்கை மையமாகவைத்தே தேர்தலில் வெற்றிபெற்றவர். நாட்டை போதைப்பொருள் பிரச்சினையிலிருந்து மீட்பேன் என்றும் குறிப்பாக சபு எனப்படும் போதைப்பொருளை ஓழிப்பேன் என்றும் அவர் உறுதி பூண்டிருந்தார்.

நீங்கள் எனது நாட்டை நாசமாக்கினால், நான் உங்களை கொலைசெய்வேன் என அவர் போதைப்பொருள் பாவனையாளர்களிற்கு மிகப்பெரியதொரு அச்சுறுத்தலை விடுத்திருந்தார்…

ஜனாதிபதியாக டட்டர்டே பதவியேற்ற பின்னர் சன்டோநினோ பல கொலைகளை சந்தித்துள்ளது.

முதலில் மக்கல் சரோன் என்பவர் கொல்லப்பட்டார். அவரது உடலுடன் மனைவி நடுவீதியில் கதறியழும் புகைப்படம் உலகின் கவனத்தை ஈர்த்திருந்தது.

death-city03

மனிலாவின் பத்திரிகைகளை ஆக்கிரமித்துள்ள இனந்தெரியாத இந்த கொலைகளிற்கு மத்தியிலும் தாங்கள் தற்போது போதைப்பொருள் பாவனையாளர்கள் விற்பனையாளர்கள் பிடியிலிருந்து விடுபட்டு பாதுகாப்பாக உள்ளதாக இந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் கொலைகளில் தங்கள் குடும்பத்தவர்களை இழந்தவர்கள் பாதுகாப்பிற்காக ஓரு விலையை செலுத்துவேண்டிய நிலையில் இருப்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது..