சுவை நிறைந்த காரசாரமான தக்காளி பூண்டு சாதம்!

தேவையான பொருட்கள் :

அரிசி – 2 கப்
வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 3
பூண்டு பேஸ்ட் – 4 டேபிள் ஸ்பூன்
இலவங்கம் – 1
கிராம்பு – 2
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பிரியாணி இலை – 1
வர மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது

செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* முதலில் அரிசியை நன்கு கழுவி, குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி, 3 விசில் விட்டு இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், இலவங்கம், வர மிளகாய், கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளித்த பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

* வெங்காயம் நன்றகா வதங்கியதும் அதில் பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து வதக்கவும்.

* தக்காளி நன்கு வதங்கியதும், அதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு கிளறவும்.

* பின் அதில் வேக வைத்துள்ள சாதத்தைப் போட்டு மசாலா நன்கு சாதத்தில் ஒன்றாகும் வரை கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* இப்போது சுவையான காரமான தக்காளி பூண்டு சாதம் ரெடி!!!