சுவையான முருங்கைக்காய் இறால் தொக்கு..!!

தேவையான பொருட்கள்

முருங்கைக்காய் – 1
இறால் – அரை கிலோ
வெங்காயம் – 1
தக்காளி – 3
கறிவேப்பிலை – சிறிதளவு
மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் பொடி – 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசால் பொடி – அரை டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை

இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கறிவேப்பிலை, மிளகு போட்டு தாளித்த பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் கொஞ்சம் வதங்கியவுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கவும்.

பின் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.  தக்காளி நன்கு வதங்கி எண்ணெய் பிரியும் பதத்தில் இறால் சேர்த்து கிளறி விடவும்.

சிறிது நேரம் கழித்து முருங்கைக்காய் சேர்த்துக் கிளறி, கரம் மசாலா சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து மூடிவைத்து அடுப்பை மிதமான தீயில் 15 நிமிடம் வேக விடவும். சூப்பரான முருங்கைக்காய் இறால் தொக்கு ரெடி.