“எட்கா” உடன்படிக்கை: இலங்கைக்கு சாதகமாக அமையுமா..?

“எட்கா” கொழும்பு அரசியலில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு இருக்கும் ஒரு விடயமாக உள்ளது.

Economic and Technology Cooperative Agreement என்பதையே சுருக்கமாக எட்கா என்று அழைக்கப்படுகிறது.

இந்தியாவும் இலங்கையும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்களை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தமாக இதுவரை அறியப்பட்டுள்ளது.

சீபா என்று மஹிந்த ராஜபக்ச காலத்தில் பேசப்பட்ட ஒப்பந்தமே இப்பொழுது எட்கா என்று போடப்பட இருக்கிறது. சீபா ஒப்பந்தத்தை மஹிந்த ராஜபக்ச மட்டும் இல்லாமல் அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்த்திருந்தார் என்பது சுட்டிக்காட்டதக்கது.

எட்கா கையெழுத்தானால் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என பிரதமர் தரப்பில் இருந்து கூறப்பட்டு வரும்நிலையில் 2014ஆம் ஆண்டி அறிக்கைபடி 4,000 மில்லியன் டொலர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் 625மில்லியன் டொலர் மட்டுமே இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இருதரப்புக்கும் இடையிலான வர்த்தகம் சுமார் ஆறு மடங்குக்கு அதிகமாக காணப்படுகிறது. இவ் ஒப்பந்தம் மூலம் இலங்கை முதலாளி வர்க்கத்தினருக்கு இந்தியாவின் சந்தைக்குள் கால் பாதிப்பது இலகுவாக்கபடுக்கும் என கருதப்படுகிறது.
குறிப்பாக மோடியின் மேக் இன் இந்தியா (Make in India) திட்டத்தின் ஊடாக அங்கு முதலீடுகள் செய்வது மிகவும் இலகுவான விடயமாக மாறிவிடும் எனலாம்.

இலங்கையின் 3 பாரிய துறைமுகங்களுக்கு இந்திய வர்த்தகத்தில் மேலும் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பும் கிட்டும், இது நன்மை பயக்குமா என்பதை நடைமுறைப்படுத்தும் விதத்தில் இருந்து தான் அறிந்துகொள்ள முடியும்.

இத்திட்டம் நன்மைகளை விட தீமைகளை அதிகம் சுமந்துவரும் என்பதே நிதர்சனம். குறிப்பாக சீபாவை எதிர்த்த ரணில் இலங்கையர்களின் இருப்பு இலங்கையிலேயே குறைந்துவிடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

சீபாவில் சேவைகள் ஒத்துழைப்பும் பரிமாறும் வகையில் இருந்ததாகவும், அதனை நீக்கி எட்காவை அறிமுகப்படுத்தியுள்ளதாக பிரதமர் கூறிவருகிறார். ஆனால் மருத்துவ ஒத்துழைப்பும் பரிமாற இருப்பதாக “அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்” குற்றம் சுமத்தி வருகிறது.

அவர்களுக்கு திட்டத்தினை விளக்கமுடியாத பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் அது தான் எதிர்க்கிறார்கள் என்று கூறி அவர்களின் ஆர்ப்பாட்டம் பற்றிய கேள்வியை முடித்துக்கொள்கிறார் என்ற பரவலான கருத்தும் நிலவுகிறது.

இதேவேளை சேவைகள் உள்ளடக்கப்படாமல் எட்கா வடிவமைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் தரப்பில் ஆரம்பத்தில் கூறப்பட்ட பொழுதும் சமீக காலமாக பிரதமர் தரப்பு போக்கு மாறியுள்ளது என விமர்சகர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

எட்காவுக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வருவதால் இந்திய விழிப்புணர்வு குழு ஒன்றை அனுப்பவுள்ளதாக இந்திய தரப்பினர் கூறுகின்றனர். இவ் ஒப்பந்தத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படும் பொழுது இதன் ஆழத்தை ஏன் புரிந்து கொள்ளவில்லை என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

ஏற்கனவே இந்தியாவுடன் செய்து கொண்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கையிலும் இலங்கைக்கு நன்மை இல்லை என்ற கருத்தை ரணில் கூறிவந்த நிலையில் மீண்டும் ஒரு ஒப்பந்தத்தை அதுவும் அவர் எதிர்த்த ஒரு ஒப்பந்தத்தை கொண்டுவர முயல்வது பாரிய அளவிலான சிக்கல்களை தரும் என்றே அநேக தரப்பினர் கூறிவருகின்றனர்.

தமிழ் தரப்பு ஊடகத்துறையும் இந்தியாவசம் சென்றுவிடும் என்று பாரிய ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது

இவை எல்லாவற்றையும் தாண்டி இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் அவற்றின் மூலம் எட்டப்படும் பாதகங்களுக்கு நாம் வழக்கு கூட தொடுக்க முடியாது. அப்படி வழக்கு தொடுப்பதாயின் “சர்வதேச மத்தியஸ்த சபையிலையே தொடுக்க முடியும் அதன் செலவுகள் அச் சட்ட அறிவின்மை என்பவற்றால் அது நம்மால் முடியாத காரியமாகவே இருக்குமென கூறப்படுகிறது.

எட்கா ஒப்பந்தம் நன்மையா? தீமையா? என்பதை ஆராய்ந்து நல்லதொரு முடிவொன்றை எடுக்கவேண்டியது காலத்தின் தேவை என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.