கார் பந்தய வீரர் அஸ்வினின் கார் விபத்து: விபத்தல்ல..கொலை..?

சென்னையில் நடந்த கார் விபத்தில் கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் மற்றும் அவரது மனைவி நிவேதிதா சம்பவ இடத்திலேயே உடல்கருகி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் பி.எம்.டபிள்யூ இசட் ரக சொகுசு காரில் பட்டினம்பாக்கம், எம்.ஆர்.சி நகரில் இருந்து போரூர் ஆலப்பாக்கம் சென்று சென்றுகொண்டிருந்தபோது எம்.ஆர்.சி. நகரில் நின்றிருந்த கார் ஒன்றில் இவர்கள் கார் மோதி தடுமாறியதில் அருகில் இருந்த மரத்தில் மோதி, மரத்திற்கும் பிளாட்பார்மிர்க்கும் இடையே சிக்கி காரில் தீ பிடித்துள்ளது.

காரின் கதவுகளை திறக்க முடியாததால் அவர்கள் இருவரும் உள்ளேயே சிக்கிக்கொண்டுள்ளனர். கார் தீப்பிடித்து எரிவதை பார்த்த பொது மக்கள் பொலிஸாருக்கு தகவல்  தெரிவித்துள்ளனர்.

இவர்கள் லீ மெரிடியன் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பும் போது தான் இந்த கோரச்சம்பவம் நடந்துள்ளது.

காரின் விலை,அதன் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றை பேசும் அப்பகுதி படித்த மக்கள் கூறும் சில தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக கூறப்படுகிறது.

1.அஸ்வின் அதி வேக கார்  பந்தய வீரர். கார் கட்டுப்பாட்டை இழந்தது என்பது என்பது நம்பக் கூடிய விஷயமே இல்லை.

2.அஸ்வின் பயன் படுத்திய பிஎம்டபுள்யூ கார் அதிநவீன சொகுசு கார். அந்த காரில் அணைத்து விதமான பாதுகாப்பு சாதனங்களும் உண்டு.

கிட்டத்தட்ட ஒரு ஏரோ பிளேனின் தொழில் நுட்பம் கொண்டது.

3 உலகின் வேறெங்கும் இந்த சொகுசு கார் விபத்தில் தீ பிடித்ததே இல்லை.

4. கார் கண்ணாடியை திறக்க முடியாத காரணத்தால் வெளியே வரவில்லை என்று சொல்வதும் ஏற்றுக் கொள்ள முடியாதவை.

5.பார்ட்டியில் என்ன நடந்தது..? யாருடன் என்ன பேசினார் அஸ்வின். யார் கொடுத்த பார்ட்டி, தொழில் முறை விரோதிகள் யார் யார் போன்ற விஷயங்களை போலிஸ் தோண்டி துருவினால் பல  மர்மங்கள் விடுபடலாம் என்கிறார்கள்.

உண்மையில் என்ன நடந்திருக்கும்…??