தந்தைக்காக களமிறங்கிய மகள்..! (வீடியோ)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் தோனியின் மகள் ஜிவா, ஐ.பி.எல்., போட்டிக்கு விளம்பரம் செய்து வருகிறாராம்.

டி-20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி தொடங்கவுள்ளது. இதில் தோனி, புனே அணிக்காக விளையாடவுள்ளார்.

இந்நிலையில் அவரது மகள் ஜிவா, இந்தியாவில் ஐ.பி.எல்., போட்டிகள் நடக்கும் முக்கிய நகரங்களான, சென்னை, கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத், டெல்லி ஆகிய நகரங்களை அவரது அம்மா ஷாக்சி சொல்லச் சொல்ல திரும்பிச்சொல்லும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டோனி பகிர்ந்துள்ளார்.