இறால் காய்கறி சூப் தயாரிப்பது எப்படி..?

தேவையான பொருட்கள்

விருப்பமான காய்கறிகள் – 200 கிராம்
இறால் – 100 கிராம்
வெள்ளை வெங்காயம் – 1
சோயா சோஸ் – 1 டீஸ்பூன்
சில்லி சோஸ் – 1 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் – 1ஃ2 டீஸ்பூன்
கார்ன் ஃபிளார் – 1ஃ2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
வெங்காயத்தாள் – சிறிதளவு

செய்முறை

இறாலை மஞ்சள்தூள், உப்பு சேர்த்து சுத்தம் செய்துக்ககொள்ள வேண்டும். கார்ன் ஃபிளாரை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.

கொத்தமல்லி, வெங்காயத்தாள், வெங்காயம், காய்கறிகயை பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், காய்கறிகளை தேவையான தண்ணீர் சேர்த்து வேக வைக்கவேண்டும்.

வேக வைத்த காய்கறிகளை வடிகட்டி தண்ணீரைத் தனியாக எடுத்துக்கொள்ளவும். வடிகட்டிய இந்த நீரில் சோயா சோஸ், சில்லி சோஸ், வெள்ளை மிளகுத்தூள், இறாலைச் சேர்த்துக் கலந்து வேக வைக்கவும்.

பின்னர் இறால் வெந்ததும் கரைத்து வைத்த கார்ன்ஃபிளாரை நீரை ஊற்றி ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி, வெங்காயத்தாள் தூவி இறக்கிவிடவும். தற்போது சத்து இறால் – காய்கறி சூப் தயார்.