சசிகுமாருக்கு வில்லன் யார் தெரியுமா..?

‘குட்டிப்புலி’ இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் சசிகுமார் ஒப்பந்தமாகியுள்ள நிலையில், இப்படத்திற்கு ‘கொடி வீரன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதோடு, வில்லன் வேடத்தில் எக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இப்படம் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் படமாக்கப்படவுள்ளதாகவும், இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையரின் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை சசிகுமார் தன்னுடைய கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ள நிலையில, எதிர்வரும் ஏப்ரல் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.