சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் மே மாதம் தொடக்கம்

‘ரெமோ’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், மோகன்ராஜா இயக்கத்தில் ‘வேலைக்காரன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா, முக்கிய வேடத்தில் பகத்பாசில் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ‘வேலைக்காரன்’ இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இப்படத்தை பொன்ராம் இயக்க உள்ளார். மே மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளது.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ என இரண்டு வெற்றிகளைக் குவித்த சிவகார்த்திகேயன்- பொன்ராம் கூட்டணி மூன்றாவதாக சேர்ந்துள்ளது. இதில் மற்றொரு ஒற்றுமை பொன்ராம் போலவே ஆர்.டி ராஜா – சிவகார்த்திகேயன் இணையும் மூன்றாவது படமும் இதுதான்.