மாபெரும் கூட்டணியில் காற்று வெளியிடை ஆல்பம் இன்று ரிலீஸ்!

மணிரத்னம் – வைரமுத்து – ஏ.ஆர்.ரகுமான் என்ற கால் நூற்றாண்டைத் தொட்டிருக்கும் மகத்தான கூட்டணியின் அடுத்த படைப்புதான் ”’காற்று வெளியிடை”. கார்த்தி, அதிதி ராவ், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படத்தின் பாடல்கள், ஜென்-Z இளசுகளின் மத்தியில் டாப் டிரெண்டிங்! இந்நிலையில், முழு ஆல்பம் இன்று அதிகாரபூர்வமாக ரிலிஸாகிறது!

ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தத் திரைப்படம், வருகின்ற ஏப்ரல் 7, 2017 அன்று திரைக்கு வருகிறது. இதுவரை இந்தப் படத்தின் ‘அழகியே’, ‘வான்… வருவான்’ மற்றும் ‘சாரட்டு வண்டியில’ ஆகிய பாடல்கள் ஒலி வடிவில் மட்டுமே வெளியாகி உள்ளன. இந்தத் திரைப்படத்தின் டிரைலர், கடந்த மார்ச் 9 அன்று ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.

ரொமான்டிக் சப்ஜக்டாக மட்டும் இந்தப் படம் இருக்குமென்று எதிர்பார்த்தவர்களுக்கு, ட்ரெய்லரில் வரும் ஆக்‌ஷன் சீன்களைப் பார்த்தால் நிச்சயம் ஆச்சர்யமாக இருக்கும். ”காற்று வெளியிடை” படத்தைப் பார்த்துவிட்ட சென்ஸார் குழு, அதற்கு U சான்றிதழை அளித்துவிட்டது.