24 ஆண்டுகளுக்கு முன் “தல” அஜித்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

தல அஜித் இன்று கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார். ஆனால்,  24 வருடங்களுக்கு முன் அதாவது 1993 இல் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஆரம்பத்தில் சின்னசின்ன ரோல்கள் கூட செய்தவர்தான் அஜித். இயக்குனர் ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனனின் படத்தில் நடிக்க அஜித்துக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் பற்றி சுரேஷ் மேனன் என்ன சொல்லுகிறார் தெரியுமா..?

தன் பேஸ்புக்கில் 1993 இல் தன் இயக்கத்தில் அஜித் நடித்த பாசமலர் ஸ்டில்லை போட்டு, முன்பு இந்த ஒரு நிமிட ரோலுக்கு 2500 ரூபாய் அவருக்கு என்று நினைத்தேன். இன்றைக்கு ஒரு படத்துக்கு 25 கோடிகள். பழைய அஜித் போலவே இன்றும் சார்மிங்கா, நட்பா உள்ளார்.” என்று பதிவு செய்துள்ளார் சுரேஷ் மேனன்.

ajith1-yaalaruvi

1993 இல் அமராவதி படத்தில் தான் அஜித் ஹீரோவாக அறிமுகமானார். அதற்கு முன் ஒரு சீரியலில் கூட நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.