ஈரானில் சுனாமி..: அச்சத்தில் உறைந்த மக்கள் (வீடியோ)

ஈரானில் தெற்கு பகுதியில் உள்ள Dayyer நகரத்தை சுனாமி தாக்கி மூழ்கடித்தது.
மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள எத்தணிக்கின்றனர். தற்போது, Dayyer நகரம் மூழுவதும் கடல் நீர் சூழ்ந்துள்ளது.

நீரில் உயிரிழந்த 40 வயதுடைய நபரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும், நான்கு சுற்றுலா பயணிகளும், நான்கு வயது சிறுவன் ஒருவனும் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது. 17 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படாத நிலையில் சுனாமி கடற்கரையை தாக்கியதில் மீன் பிடி படகுகள் பயங்கர சேதமடைந்துள்ளது.

தற்போது இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.