ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலை… மன்னிப்புக் கேட்கும் போப்!

ருவாண்டா நாட்டில் கடந்த 1994-ம் ஆண்டு நடந்த இனப்படுகொலையில் கிட்டத்தட்ட 800,000 ருவாண்டா குடிமக்கள் கொல்லப்பட்டனர். ருவாண்டாவில், டுட்சீஸ் மற்றும் ஹுடூஸ் (Tutsis and Hutus) என்ற இரண்டு இன மக்கள் இருக்கின்றனர்.

இதில் டுட்சீ மக்கள் சிறுபான்மையினர். அவர்களுக்கெதிராக ஹுடூஸ் இனத்தின் அடிப்படைவாதிகள் இனப்படுகொலை நிகழ்த்தினர். இதில், ருவாண்டா நாட்டில் இருந்த கதோலிக்க சர்ச்சுகள் ஹுடூஸ் இனத்துக்கு ஆதரவாக செயல்பட்டது என்று அந்நாடு கூறிவந்தது.

இந்நிலையில், போப் பிரான்சிஸும் ருவாண்டாவின் அதிபர் பால் காகமே (Paul Kagame) சந்தித்துள்ளார். சந்திப்புக்குப் பின் வாடிகன் தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கை வழியாக போப், ‘ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலையில் சர்ச் மற்றும் அதன் நபர்கள் இழைத்த பாவங்களுக்கு கடவுளிடம் மன்னிப்புக் கேட்கிறேன்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், ‘டுட்சீ சமூகத்தின் மீது நடைபெற்ற இனப்படுகொலைக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.’ என்று கூறப்பட்டுள்ளது.