உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் வெளியீடு: முதலிடம் எந்த நாடு தெரியுமா..?

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் நோர்வே நாடு முதலிடம் பிடித்துள்ளது.

சர்வதேச மகிழ்ச்சி தினம் உலகம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை)கடைபிடிக்கப்படுகிறது.

இந்தநிலையில், சமூக ஆதரவு, நம்பிக்கை, வாழ்க்கை முடிவுகளை எடுக்கும் சுதந்திரம், பெருந்தன்மை உட்பட ஆறு காரணிகளைக் கொண்டு உலகின் அதிக மகிழ்ச்சியான நாடு எது? என்று அண்மையில் ஆய்வு ஒன்று நடாத்தப்பட்டது.

இந்த ஆய்வில் அதிக புள்ளிகள் பெற்று நோர்வே நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா இந்தப் பட்டியலில் 14 வது இடத்தைப் பிடித்துள்ளது.

இதில் முதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகள் எவை தெரியுமா..?

இதோ அந்த நாடுகள் பின்வருமாறு:
1.நோர்வே(7.537)
2.டென்மார்க்(7.522)
3.ஐஸ்லாந்து(7.504)
4.சுவிட்சர்லாந்து(7.494)
5.பின்லாந்து(7.469)
6.நெதர்லாந்து(7.377)
7.கனடா(7.316)
8.நியூசிலாந்து(7.314)
9.அவுஸ்திரேலியா(7.284)
10.ஸ்வீடன்(7.284)