பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய புனரமைப்புக்கு இவ்வளவு செலவா?

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி முதல் சர்வதேச விமானங்களுக்கான ஓடுபாதை திறக்கப்படுமென்று தலைமை சிவில் பொறியியலாளர் விஜய விதான தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து சர்வதேச விமான சேவைகள் வழமை போல நடைபெறுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தெரிவிக்கையில்;

ஓடுபாதைகளை திருத்தியமைக்கும் பணிகள் அடுத்த மாதம் 5ம் திகதி பூர்த்திசெய்யப்படும்.

இதன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் கடந்த ஜனவரி மாதம் 6ம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

3350 மீற்றர் நீளத்தையும், 45 மீற்றர் அகலத்தையும் கொண்ட இந்த ஓடுபாதை சர்வதேச விமான, சிவில் விமான அமைப்பின் விதிமுறைகளுக்கு அமைய சீரமைக்கப்பட்டுள்ளது.

இந்தத்திட்டத்திற்காக 7.2 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மத்திய ஆசியாவின் 5வது இடத்திற்கு முன்னேறியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

செய்தி: யாழருவி நிருபர் யாழினி