பட்டுப்போன்ற மேனிக்கு…!!

சில பெண்களுக்கு வயசானாலும் தோல் சுருங்காது. வழவழவெனச் சின்னப் பெண்ணைப் போலவே இருக்கும்!

தோலின்மீது மெலிதான வெடிப்பு எதுவுமில்லாத பட்டுப் போன்ற மேனி வேண்டுமா?

அப்போ இதை செய்யலாமே!!

எலுமிச்சை உடம்புக்கு நல்லது!

குளிப்பதற்கு முன் – ஒரு வாளித் தண்ணீரில் ஒரு மூடி எலுமிச்சையைப் பிழிந்து கொள்ளுங்கள். சோப்பு தேய்த்துக் குளித்த பின், கடைசியாக ஒரு ‘லெமன் பாத்’ எடுங்கள்

இதன் புத்துணர்வையும் சரும மினுமினுப்பையும் அனுபவித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

தேமலை விரட்டுங்க!

நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும் கார்போக அரிசியை வாங்கி அதனைப் பொடி செய்து, மெல்லிய துணியில் சலித்து, ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

தினமும் இதில் கொஞ்சம் எடுத்துத் தண்ணீர் விட்டு பேஸ்ட் மாதிரி செய்து தோலில் தடவுங்கள். விரைவில் தேமல் இருந்த இடம் தெரியாமல் போகும்!

மெருகுக்கு பப்பாளி!

நன்கு பழுத்த பப்பாளியை நறுக்கி, மிக்ஸியில் போட்டு அடித்து, அத்துடன் ஒரு மூடி எலுமிச்சை சாறை விட்டுக் கலந்து, உடம்பில் தேய்த்து, ஒரு மணி நேரம் போல ஊறியபின் குளிக்கலாம்.