சரும வறட்சி ஏற்படாமல் தடுக்கும் கரட் தக்காளி ஜூஸ்!

பழங்களுடன் காய்கறிகளை குளிர்பானங்களாக தயாரித்து அருந்தும்போது உடல் புத்துணர்வுடன், கோடைகால நோய் ஏதும் தாக்காமல், சரும வறட்சி, நாவறட்சி ஏற்படாமல் பாதுகாக்க முடிகிறது.

தேவையான பொருட்கள் :

கரட் – 2
தக்காளி 2
கருப்பு உப்பு – கொஞ்சம்
சீரகத்தூள் – அரை கரண்டி
புதினா இலைகள் – 10.

செய்முறை :

  • கரட் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • கரட் தக்காளி இரண்டையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும். நன்கு கூழாக அரைத்த பிறகு வேறு பவுலில் ஊற்றி கொள்ளவும்.
  •  அரைத்த ஜூஸில் கருப்பு உப்பு, சீரகத்தூள்,  புதினா இலைகளை கலக்கி பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியான பிறகு எடுத்து அருந்தவும். உடல் குளிர்ச்சியும், புத்துணர்வும் கோடைகாலத்தில் பெற இந்த ஜூஸ் உதவுகிறது.