குடைமிளகாய் புலாவ் செய்வது எப்படி?

குடைமிளகாய் புலாவ் தயார் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி – 1/2 கப்
வெங்காயம் – 1
குடைமிளகாய் – 1/4 கப்
ஏலக்காய் – 1
கிராம்பு – 2
பட்டை – 1/4 இன்ச்
கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு

அரைப்பதற்கு…

பூண்டு – 3 பற்கள்
மிளகு – 1/2 டீஸ்பூன்
முந்திரி – 5

செய்முறை:

* கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொண்டு, அதோடு குடை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அரிசியை நன்றாக கழுவி நீரில் போட்டு 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.

* மிக்ஸியில் பூண்டு, மிளகு, முந்தியை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரிசியை போட்டு, உப்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை சேர்த்து வேக விடவும். சாதத்தை உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தை போட்டு தாளித்த பின் அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் குடைமிளகாயை போட்டு 5 நிமிடம் வதக்கவும்.

* அடுத்து அதில் அரைத்த முந்திரி பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும். பின் அதில் கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் கிளறி, தேவையான அளவு உப்பு தூவி நன்கு பிரட்டவும்.

* அடுத்து உதிரியாக வடித்த சாதத்தை சேர்த்து 5 நிமிடம் நன்கு பிரட்டி கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

* சூப்பரான ஈஸியான குடைமிளகாய் புலாவ் ரெடி!!