400 வருடங்களுக்கு பின் ராட்சத பாறை ஒன்று, இன்று பூமியை கடக்கிறது – நாசா

சுமார் 400 வருடங்களுக்கு பின் ராட்சத பாறை ஒன்று, இன்று பூமியை கடந்து செல்கிறது. இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்று நாசா அறிவித்து உள்ளது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகள், 2014 மே மாதம் அரிசோனா பகுதியில் உள்ள லீமான் மலையை ஆய்வு செய்தபோது ஒரு பெரிய பாறை, பூமியை நோக்கி நகர்ந்து வருவதை கண்டுபிடித்தனர். அதற்கு ‘தி ராக்’ என்று பெயரிட்டனர்.

400 வருடங்களுக்கு பின் பூமியை நோக்கி நகர்ந்து வந்த இந்த பாறையால், பூமிக்கு பாதிப்பு உண்டாகுமா என்பது குறித்து ஆய்வு செய்து வந்தனர். 640 மீட்டர் முதல் 1.4 கிமீ வரை இந்த கோளின் அகலம் இருந்தது. நிலாவை விட இரண்டு மடங்கு பெரியதாக இருப்பதாக நாசா தெரிவித்தது.

அந்த பாறை, ஒரு வினாடிக்கு 33 மீட்டர் வீதம் பூமியை நெருங்கி வந்து கொண்டு இருந்தது. அதாவது மணிக்கு 73 மைல் வேகத்தில் வந்து கொண்டு இருப்பதாக நாசா கணித்தது. பூமியில் இருந்து வெறும் கண்ணால் அந்த பாறையை பார்க்க முடியும் என்று தெரிவித்தது.

இந்த ராட்சத பாறை இன்று காலை 8.24 மணிக்கு அதாவது இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணி அளவில் பூமியை கடந்து செல்கிறது. பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள தூரத்தை விட 4.6 மடங்கு தூரத்தில் அதாவது 17,66,400 கிமீ தூரத்தில் இந்த பாறை பூமியை கடந்து செல்கிறது. இதனால் பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று நாசா அறிவித்துள்ளது.

இருப்பினும் இதே போன்ற ராட்சத பாறை ஒன்று அடுத்ததாக 2500ல் பூமியை நெருங்கி வரக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும், அந்த பாறை பூமி மீது மோதினால் பெரிய பாதிப்பு ஏற்படலாம் என்று நாசா தெரிவித்துள்ளது.