உண்மைச் சம்பவம்..பேஸ்புக்கால் பாதிக்கப்படும் பெண்கள்: படியுங்கள்..பகிருங்கள்!!

“இது உண்மைச்சம்பவம். பேஸ்புக்கில்தான் இன்றைய இளம் இரத்தங்கள் மூழ்கிக்கிடக்கின்றன. அந்த முகநூலுக்கு இன்னொரு இருண்ட முகம் உண்டு. அங்கே உலவும் எத்தர்கள் பெண்களைத் தமது இச்சைகளுக்கு பயன்படுத்தி பின்னர் வீசி எறிந்து விடுவார்கள். அகப்பட்டால் அவ்வளவேதான்.

எனவே இக்கட்டுரையை பெற்றோர் ஊன்றிப் படிக்க வேண்டும். ஏனெனில் பெண்களைக் கொய்யவும் பின்னர் புழுதியில் எறியவும் பலர் இருப்பதால் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்.

அன்று ஞாயிற்றுக்கிழமை நேரம் காலை 10 மணியை தாண்டியிருக்கும். மயூரனின் தாய் சாய் நாற்காலியில் அமர்ந்தவாறு வரவேற்பறையில் பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்தார். அப்போது யாரோ மோட்டார் சைக்கிளில் வரும் சத்தம் கேட்கவே பத்திரிகையை மடித்து ஒரு பக்கமாய் வைத்துவிட்டு வாசலை நோக்கி விரைந்துச் சென்றார்.

“ஏண்டி மயூரன் வீட்டில் இருக்கிறானா?” என்று கேட்டவாறு தலைகவசத்தை கழற்றினான் சங்கீத்.

“இது சங்கீத் தானே! எனக்கு அடையாளம் தெரியவில்லை. வீட்டுக்குள் வா! அவன் அறையில் தூங்குகிறான். என்று அவனை அன்புடன் வீட்டுக்குள் அழைத்தாள்.

சைக்கிளை நிறுத்திவிட்டு சங்கீத் நேராக மயூரனின் அறைக்குள் செல்கின்றான். அப்போது அறைக்கதவு உட்புறமாக தாழிடப்பட்டிருந்தது. எனவே “ஏய் நீ இன்னும் தூக்கமா? எழுப்புடா ” என்று சிறிது சத்ததுடன் கதவை தட்டினான். சங்கீத்தின் சத்தம் கேட்ட மயூரன் கதவை திறந்தான்.

“என்னடா, அம்மா நீ தூக்கத்தில் இருப்பதாக சொன்னார்கள். நீ அறைக்கதவை பூட்டிக்கொண்டு உளே என்ன செய்கிறாய் ?”

‘உனக்கு தெரியாதா நான் என்ன செய்வேன் என்று! கொஞ்சம் இன்டநெற்றில் வேலையாகவிருந்தேன் வீட்டில் இருக்க சோம்பல்” என்று பதிலளித்தான் மயூரன்.

தொடர்ந்து சங்கீத் “ம்..ம்…ம்; தெரியும் தெரியும் உன்னுடைய இன்ட்நெற் வேலைகள்…; மாச்சான் இன்னைக்கு மார்கெட்டில உன்னுடைய பழைய துண்டைக் கண்டேன்!”

“அதற்கு இப்ப என்ன? அது முடிந்த கதை.. இங்க பாரு என்ட புது ஆளை” என்று தனது கையடக்க தொலைபேசியிலிருந்த அழகிய இளம் பெண்ணொருத்தியின் படத்தை சங்கீத்துக்கு காட்டினான் மயூரன்.

“சூப்பரா இருக்குற மச்சான்!”
“ஏய் உனக்கு இப்படியொரு ஆளை செட்பண்ணி தரட்டுமா?”
“ஐயோ சாமி ஆளைவிடு.. எனக்கு வேண்டாம் இந்த தலைவலி எல்லாம்…”
இவ்வாறு இருவரும் பேசிக்கொண்டார்கள்.

மயூரன் 24 வயது இளைஞன். பெற்றோருக்கு ஒரே பிள்ளை. தந்தை நீர்கொழும்பு பிரதேசத்தில் பிரபல வியாபாரி. அவருக்கு சர்வதேச ரீதியில் வியாபார தொடர்புகள் இருந்தன. எனவே தந்தையின் உழைப்பில் உருவான சொத்துகள் அனைத்துக்கும் ஒரே வாரிசு மயூரன் என்பதால் வசதி வாய்ப்பில் அவனுக்கு எந்தவித குறையுமிருக்கவில்லை.

ஆனாலும் மயூரன் பிடிவாதக்காரனாகவும், குழப்படிக்காரனாகவும் இருந்தான். தந்தையை போல் பணம் சம்பாதிப்பதிலோ, சேமிப்பதிலோ அவனுக்கு ஆர்வம் இருக்கவில்லை. ஆனால் பேஸ்புக் பயன்பாட்டில் பெரும் கில்லாடியாகவிருந்தான். பேஸ்புக்கிலுள்ள அழகிய பெண்களின் புகைப்படங்களை திருடுவது, அவர்களுக்கு காதல் வலை வீசுவது அதன்மூலம் தனது பாலியல் சிற்றின்பங்களை நிறைவேற்றிக்கொள்வது, என்று பேஸ்புக்கில் தனது அதிகளவான காலத்தை செலவழிந்தான். எனினும் இதுவெல்லாம் அவனது பெற்றோருக்கு அறிந்திருக்கவில்லை.

தன்னுடைய பேஸ்புக் கணக்கில் அழகான புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து தன்னை ஒரு ஹீரோவாக காட்டிக்கொண்டான். அதுமட்டுமின்றி அவனுடைய நண்பர்கள் பட்டியலில் அதிகளவில் இளம் பெண்களே நண்பர்களாக இருந்தார்கள். அவர்களுடன் நட்புறவாக பேசி தன்னுடைய காதல் வலையில் அவர்களை சிக்கவைப்பான். அவர்களின் பேஸ்புக் கணக்கை நோட்டமிட்டு புகைப்படங்களை தனது கையடக்க தொலைபேசிக்கு டவுன்லோட் செய்துக்கொள்வான்.

அந்த புகைப்படங்களிலுள்ள பெண்களின் தலையை வெட்டி எடுத்து நிர்வாண பெண்களின் உடல்களுடன் பொருத்தி ரசிப்பதும் அவற்றை இணையத்திலும் பதிவிறக்கம் செய்வதும் அவனது விநோதமான பொழுதுப்போக்காக இருந்தது.

மயூரனின் இந்த திருவிளையாடல்களால் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அந்தவரிசையில் மயூரனால் பாதிக்கப்பட்ட இரு பெண்களே அமயாவும், நிவேதாவும்.

அமயா பார்ப்பதற்கு அழகனாவள்.

பேஸ்புக் மூலமே மயூரனுக்கும் அமயாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. மயூரன் வெகுநாட்கள் செல்லும் முன்னரே அமயாவின் தொலைபேசி இலக்கத்தை வாங்கிக்கொண்டு தொலைபேசியில் உரையாட தொடங்கினான்.

அதுமட்டுமின்றி,சீக்கிரமே இருவரும் வத்தளை கடற்கரையில்ச ந்தித்துக்கொண்டார்கள். மயூரன் தனது காரில் அமயாவை பார்ப்பதற்கு வந்திருந்தான். அமயாவை முதன்முதலில் நேரில் கண்ட மயூரன் அவள் அழகில் மயக்கிப்போனான். அவளும் ஆரம்பத்தில் சற்று தயக்கத்தை வெளிப்படுத்தினாலும் சிறிதுநாட்களில் சம்மதம் தெரிவித்தாள்.

எனினும், அமயாவை தனது பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்துவது மட்டுமே மயூரனின் ஒரே குறிக்கோளாக இருந்தது. எனவே தன்னுடைய காரில் அமயாவை எல்லா இடங்களுக்கும் கூட்டிச்சென்றான். இருவரும் ஒன்றாகவிருக்கும் காட்சிகளை தனது கையடக்க தொலைபேசியில் படமெடுத்தான்.

ஆனால் அவனை அமயா முழுமையாக நம்பினாள். அவனை உண்மையாக காதலித்தாள். அதனால் மயூரனின் ஆசைகளுக்கு அவளும் இணங்கிப்போனாள்.

கனியை புசித்த பின்னர் மயூரனுக்கு அங்கென்ன வேலை! அவளை விட்டு மெல்ல மெல்ல விலக ஆரம்பித்தான். முதலில் அமயாவின் தொலைபேசி அழைப்புகளுக்கு, குறுங்தகவல்களுக்கும் பதிலளிக்காதவன் நாளடைவில் தனது சிம் காட்டையும் மாற்றினான். இதனால் அமயா மனம் உடைந்து போனாள். மயூரனுடன் பழகிய நாட்களை மறக்க முடியாமல் தவித்தாள்.

எனினும் மயூரன் அமயாவை விட்டு விலகி இருவாரங்களில் பேஸ்புக் மூலம் நிவேதா என்ற இளம் பெண்ணொருவரை காதலிக்க ஆரம்பித்தான். அதுமட்டுமின்றி அமயாவிடம் காட்டிய அதே காதல் லீலைகளை நிவேதாவிடமும் காட்டி அவளுடன் உல்லாசமாகவிருந்தான். அவளோ அப்பாவி இதன்விளைவாக நிவேதாவும் மயூரனிடன் ஏமாந்தாள். எனினும் நிவேதா அமயாவை போல் அமைதியாக இருக்கவில்லை.

மயூரனிடம் பலமுறை சண்டையிட்டாள். எனினும், அவன் நிவேதாவின் முகத்தை நிர்வாண பெண் உடல்களுடன் பொருத்தி பதிவேற்றம் செய்து உன்னை நாறடிப்பேன்! என்று மிரட்டினான். அவள் சும்மாயிருக்கவில்லை. தனக்கு நடந்ந அநீதியை தனது பெற்றோரிடம் சொன்னாள்.

நிவேதாவின் தந்தையும் சகோதரனும் மயூரன் யார் என்பதைக் கண்டுபிடித்து அவனுடைய வீட்டிற்கு சென்றார்கள். அப்போது மயூரனின் தாய் மட்டுமே வீட்டில் இருந்தார். ‘எங்கே உன் மகன்’ என்று ஆத்திரத்துடன் கேட்டார்கள். சத்தம் கேட்டு மயூரன் அறையிலிருந்து வெளியே வர தந்தையும் மகனும் சேர்ந்து மயூரனை ஆத்திரத்தில் அடிக்க முனைந்தார்கள்.

குறுக்கிட்ட தாயார் “எதற்காக என்னுடைய மகனை அடிக்கின்றீர்கள் அவன் என்ன தவறு செய்தான?;” என அழுதவாறு கேட்டாள். “இவன் செய்த காரியத்துக்கு இவனை அடிப்பதைவிட கொன்றே போட்டு விட வேண்டும். என்று கூறியபடியே மயூரனின் வண்டவாளங்களை தாயிடம் சொல்ல அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

சிறிதுநேரத்தில் மயூரனை கைதுசெய்வதற்கு பொலிஸாரும் வந்தனர்.

யாழருவிக்காக யாழினி