ஏப்ரல் 20: ஹிட்லர் பிறந்த தினம் இன்று!

அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler) ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கியவர்.

அவர் 1933 ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டார். பின்பு 1934ஆம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் தலைவரானார். 1945ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் திகதியன்று தற்கொலை செய்துக்கொண்டது வரை அவர் அப்பதவியில் தொடர்ந்தார்.

ஜெர்மனி நாட்டின் ஃபியூரர் என அழைக்கப்பட்டார். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஸ்டாலினின் செம்படைகளிடம் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் ஹிட்லரின் நாசிப்படைகள் வீழ்ச்சியுற்றது. அப்படைகள் அவரை நெருங்குவதற்கு முன் தன் கைத்துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரோடு அவர் மனைவி இவா பிரானும் தற்கொலை செய்து கொண்டார்.