காதலியின் முன்னே காதலன் உயிரிழந்த சம்பவம்..(வெளியானது அதிர்ச்சி வீடியோ)

பிரேசில் நாட்டில் காதலியின் கண் முன்னால் காதலன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்பி எடுத்தபோது கடல் அலை அடித்துச்சென்றதாக மேலும் தெரியவருகிறது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது;

Leonardo Santos(25) மற்றும் Amanda Marie Roque(19) என்ற காதல் ஜோடி பிரேசில் நாட்டிற்கு சுற்றுலாவாக, குறித்த நாட்டிலுள்ள Farol de Santa Marta என்ற கடற்கரைக்கு சில தினங்களுக்கு முன்னர் சென்றபோது, இவர்களோடு உறவினர் ஒருவரும் சென்றதாக மேலும் தெரியவருகிறது.

இதேவேளை குறித்த ஜோடி கடற்கரையில் இருந்த பாறை மீது நின்று புகைப்படம் எடுத்தபோது  திடீரென வந்த கடல் அலை ஒன்று இருவரை அடித்து கடலுக்குள் இழுத்துச் சென்றுள்ளது.

இக்காட்சியை புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்த உறவினர் ‘காப்பாற்றுங்கள்…காப்பாற்றுங்கள்’ என கூக்குரல் கொடுத்ததும், அங்கிருந்த சிலர் கடலில் குதித்து இளம்பெண்ணைக் காப்பாற்றியுள்ளனர்.

மேலும் குறித்த பெண்ணின் காதலனை கண்டிபிடிக்க இயலாத நிலை நீடித்துள்ளதாகவும், மீட்புக்குழுவினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அவர்கள் வந்து தேடியும், 4 நாட்களாகப் பிறகு பிறிதொரு இடத்தில் காதலன் சடலமாகவும் மீட்கப்பட்டுள்ளார்.

அலை அடித்தபோது நபரின் தலை பாறையில் அடிபட்டு உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

காதலி கண் முன்னால் காதலன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியிலேயே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, ஏனையவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.