சுவையான பன்னீர் ஸ்டிக்ஸ்..!!

பன்னீர் ஸ்டிக்ஸ் எப்படி தயார் செய்வது? வாங்க தெரிந்து கொள்ளலாம்

தேவையான பொருட்கள்

பன்னீர் – 150 கிராம்,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
மசாலா – 1 டீஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
தந்தூரி தூள் – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – 1/2 கப்,
உப்பு – தேவையான அளவு

செய்முறை

* பன்னீரை நீள நீளமாக விரல் வடிவில் வெட்டிக் கொள்ளவும். * ஒரு பாத்திரத்தில் பன்னீருடன் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, இஞ்சி, பூண்டு விழுது, தந்தூரி தூள், சிறிது எண்ணெய் சேர்த்து நன்கு பிரட்டி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

* பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி நன்கு காய்ந்ததும் பன்னீரை போட்டு நன்கு சிவக்கும் வரை பொரித்தெடுத்துப் பரிமாறவும்.

* தற்போது குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் ஸ்டிக்ஸ் தயார்…!
இதேபோன்று உங்களது சமையல் குறிப்புக்களும் யாழருவியில் இடம்பெற yaalaruvi.com@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதி அனுப்புங்கள்.