வெடிக்காத நிலையில் குண்டு மீட்பு..!!!

சாவகச்சேரி – கைதடி, நுணாவிலில் ஏ-9 சாலையை அண்டியுள்ள குடியிருப்பிற்கு அருகில் வெடிக்காத நிலையில் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இந்தக் குண்டு நேற்று (வியாழக்கிழமை) குடியிருப்பாளர் தனது காணியைத் துப்பரவு செய்தபோது, வெடிக்காத நிலையில் இருந்த குண்டு கண்டெடுக்கப்பட்டதாக, சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.மேலும் யாழ்.விசேட அதிரடிப் பொலிஸார் மூலம் அப்புறப்படுத்தி குண்டினை செயலிழக்கச் செய்ய அனுமதி வழங்குமாறும் அவர் கோரியுள்ளார்.

நீதிமன்ற பதில் நீதிவான் செ.கணபதிப்பிள்ளை அறிக்கையினைப் பார்வையிட்டு அனுமதி வழங்கியதையடுத்து விசேட அதிரடிப் பொலிஸார் குண்டினை மீட்டு கொண்டு சென்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

யாழருவி நிருபர் பகலவன்