வெறும் 10 நாட்களில் உடல் எடையைக் குறைத்த நடிகை..!!

சதுரங்க வேட்டை படத்தில் நட்டிக்கு ஜோடியாக நடித்தவர் இஷாரா நாயர்.

இப்படத்தில் இவர் நடித்த பானு என்கின்ற வெகுளி கதாபாத்திரம் மூலமாக ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் உள்ளங்களையும் கொள்ளை அடித்து சென்றவர். தற்போது ‘அதி மேதாவிகள்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்தப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து இஷாரா நாயர் கூறியதாவது; இந்த படத்திற்காக என்னை உடல் எடையை இயக்குநர் ரஞ்சித் மணிகண்டன் குறைக்க சொன்னார். அதற்கு அவர் கொடுத்த கால அவகாசம் வெறும் 10 நாட்கள் தான். இருந்தாலும் இதை நான் சவாலாக எடுத்து கொண்டு, 10 நாட்களில் உடல் எடையை குறைத்தேன்.

மற்ற எல்லா படங்களில் இருந்தும் ‘அதி மேதாவிகள்’ படம் தனித்து விளங்கும் என்று நடிகை இஷாரா நாயர் கூறினார்.