கணவன்-மனைவி கைது: ஏன் தெரியுமா?

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டைப் பிராய் பகுதியில் மது (கசிப்பு) உற்பத்தி செய்த குற்றச்சாட்டில் கணவன் மற்றும் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மது உற்பத்தியை தடுக்க பொது மக்கள் கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே கோப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை குறித்த நபர்களின் வீட்டினை நேற்று (வியாழக்கிழமை) சுற்றிவளைத்த பொலிஸார், 1 லட்சத்து 61 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு மற்றும் 25000 மில்லி லீற்றர் கோடா உட்பட கசிப்பு உற்பத்தி செய்யும் உபகரணங்கள் உட்பட பல பொருட்களையும் கைப்பற்றியுள்ளதாக தெரியவருகிறது.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

யாழருவி நிருபர் பகலவன்