தமிழீழம் என்ற கனவு ஒருநாள் நனவாகும்! சத்தியராஜ்!

‘கடல் குதிரைகள்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டுவிழா கடந்த 15 ஆம் திகதி சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்து  கொண்டு பேசும் போதே திரைப்பட நடிகர் புரட்சித் தமிழன் சத்தியராஜ் அவர்கள் எல்லோரது கனவாக இருக்கும் தமிழீழம் என்றாவது ஒருநாள் நனவாகும் என்று குறிப்பிட்டார்.

படத்தின் இசைத் தட்டை இயக்குநர் இமையம் பாரதிராஜா வெளியிடுவதாக இருந்த நிலையில் தவிர்க்க முடியாத சூழ்நிலையால் வராததால் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட புரட்சித் தமிழன் சத்தியராஜ் பெற்றுக் கொண்டார்.
நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தவர்களுக்கு சிறப்பாக உருவாக்கப்பட்ட குடுவையில் முள்ளிவாய்க்கால் மண் மற்றும் இடிந்தகரை மண் ஆகியவற்றை இட்டு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டிருந்தது.