முட்டை சாப்பிடலாமா..? மீறி சாப்பிட்டால்???

கோடை காலத்தில் நாம் உண்ணும் உணவில் அவதானமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு உடல்நல அவதிகளுக்கு உள்ளாக நேரலாம்.

உதாரணமாக, கோடையில் முட்டை சாப்பிடுவது நல்லது, கெட்டதா என்ற குழப்பம் சிலருக்கு இருக்கலாம். முட்டையில் விட்டமின்கள் மற்றும் கனிமச் சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொஸ்பரஸ் போன்றவை நிறைந்திருக்கின்றன.

அவ்வளவு சத்துகள் நிறைந்த முட்டையை கோடைகாலத்தில் சாப்பிட்டால், செரிமான பிரச்சினை ஏற்படும் என்ற பரவலான கருத்து இருக்கிறது. ஆனால் அது சரியில்லை என்கின்றனர், உணவியல் வல்லுநர்கள். உண்மையில், கோடைகாலத்தில் முட்டை சாப்பிடுவதால் உடல் வெப்பத்தைக் குறைக்கலாம் என்கிறார்கள் உணவியல் வல்லுநர்கள்.

முட்டையில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துகள், கோடையில் உடலின் நீர்ச்சத்தைச் சீராகப் பராமரிக்க உதவுகின்றன. மேலும் முட்டை உடலின் ஆற்றலை நீண்டநேரம் தக்கவைத்து, கோடையில் உடல் சோர்வு, பலவீனத்தைத் தடுக்கிறது.

கோடையில் அளவுக்கும் அதிகமாக முட்டை உட்கொண்டால், வயிறு தொடர்பான பல்வேறு அசௌகரியங்களை ஏற்படுத்தும். பொதுவாகவே, கோடை கடக்கும் வரை அசைவ உணவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது.