உடலையும் மனதையும் காக்கும் உணவுகள்!!

ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல மன நலத்தையும் காக்கும் என்கிறார்கள் மருத்தவர்கள்.

* மூளையின் செயல்பாடுகள் சிறப்பாக நடக்க முட்டை சாப்பிடுவது நல்லது. அதில் விட்டபின் பி, அயோடின், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், துத்தநாகம், புரதம் போன்றவை உள்ளடங்கி இருக்கின்றன. அவை மூளையின் இயக்கத்திற்கு நலம் சேர்க்கும்.

* வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்திருக்கிறது. மேலும் டிரிப்டோபன் என்ற பொருளும் இருக்கிறது. அது சந்தோஷமான ஹார்மோனான செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்க உதவும்.

* ஸ்ட்ராபெர்ரி பழத்திலும் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது. அத்துடன் விட்டமின் சியும் கலந்திருக்கிறது. இவை நரம்புகளை தூண்டுவதற்கு துணை புரியும். மனநிலையையும் மேம்படுத்த உதவும்.

* தேங்காய், மூளையின் ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கும் பொருளாகும். இதில் நல்ல மனநிலையை உண்டாக்கும் விசேஷ கொழுப்பும் உள்ளடங்கி இருக் கிறது.

* உடல் ஆரோக்கியத்தை பல விதங்களில் மேம்படுத்துவதில் தேனுக்கு முக்கிய பங்கு உண்டு. மூளையில் ஏற்படும் அழற்சியை குறைக்கவும் உதவுகிறது. அதன் மூலம் மன அழுத்தம் ஏற்படுவதை தடுத்து மூளையையும், மனநலனையும் ஆரோக்கியமாக வைத்திருக்க துணைபுரியும்.