சம்பளத்தை உயர்த்துங்க…! – ரொம்ப கஷ்டமா இருக்கு !! – ஹர்பஜன்சிங்

முதல் தர போட்டியில் விளையாடும் வீரர்களுக்கான சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

புதிய ஊதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு சமீபத்தில் சம்பளம் உயர்த்தப்பட்டது. இதில் சில மாற்றங்கள் வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியினரை, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கும்பிளே வரும் 21-ம் திகதி சந்தித்து பேச இருக்கிறார். இந்த நிலையில் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், கும்பிளேவுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

அதில், ‘முதல் தர போட்டியில் விளையாடும் வீரர்கள் சம்பளம் குறைவாக இருக்கிறது. இதை வைத்து கொண்டு வீரர்கள் குடும்பத்தை கவனிப்பது சிரமம். இதனால் ஊதியத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார்.