ஈழப் படுகொலை குறித்து கருத்து கூற மறுத்த ரஜினி: ஆத்திரத்தில் மக்கள்!

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் பற்றிய கேள்விக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பதிலளிக்க மறுப்பு தெரிவித்தமையானது, தமிழர்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்து முள்ளிவாய்க்காலில் புதைத்தது இலங்கை அரசு. இன்று முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இடம்பெற்று 8ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கண்ணீர் வடித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், புதிதாக கட்சித் தொடங்கப் போவதற்கான முஸ்தீபு பணிகளில் ஈடுபட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்திடம் முள்ளிவாய்க்கால் தினம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு ரஜினி பதில் அளிக்க மறுத்து விட்டார்.

ரஜினியின் இந்தசெயலானது ஈழத் தமிழர்கள் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்தை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளதோடு, பதில் கூற முடியாமல் அரசியலுக்கு வந்து என்ன செய்யப்போகிறார் என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.