சச்சின் திரைப்படத்திற்கு 2 மாநிலங்களில் வரிவிலக்கு

சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகும் ‘சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ்’ திரைப்படத்துக்கு, கேரளா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கையை மையமாக கொண்டு ‘சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ்’ திரைப்படம் உருவாகியுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் சச்சினும் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் 26-ஆம் திகதி வெளியாகவுள்ளது. ஜேம்ஸ் எர்ஸ்கின் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இதனிடையே 26-ஆம் திகதி வெளியாகும் சச்சின் திரைப்படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கேரளா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் வரி விலக்குடன் இத்திரைப்படம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விரைவில் வெளியாகவிருக்கும் சச்சின் திரைப்படத்தை தனது தந்தை மற்றும் சகோதரருக்குச் சமர்பிப்பதாக சச்சின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.