வடமாகாண வைத்தியர்கள் சங்கம் வேலை நிறுத்தம்

எதிர்வரும் 22ம் திகதி அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடு தழுவிய ரீதியில் போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சயிட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு எதிர்ப்பை வெளியிட்டு இவ்வாறு போராட்டம் நடத்தப்பட உள்ளது. அதே வேளை அளுத் கடையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலை நோக்கி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் ஏற்பாட்டில் பேரணி ஒன்றும் இடம்பெறும்.

இப் போராட்டத்தில் வட மாகாண வைத்தியர்கள் காலை 8மணி முதல் 12மணி வரை பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபடுவர்.

1.சயிட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் கைது செய்தமை
2. இலங்கை மருத்துவ சபை மீது மேற்கொண்ட வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்காமை.
3.சயிட்டம் மருத்துவ கல்லூரியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சம்பந்தபட்ட சூட்டு சம்பவத்திற்கு விசாரணை முடிவடைந்த பின்னரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்கும்,
4.தொழிற் சங்க நடவடிக்கைகளையும், அதன் தலைமையையும் நசுக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதற்கு கண்டனம் தெரிவித்தும்
5.சயிட்டம் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு அரச வைத்தியசாலைகளை பயன்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு வழங்கியதற்காக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கு எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்காமை.

மேலும் எதிர்வரும் 29ம் திகதி முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஏனைய அனைத்து தொழிற் சங்கத்தினர் உதவியுடன் கால வரையறையற்ற போராட்டத்தில் ஈடுபடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழருவி நிருபர் பகலவன்