யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தலை சிதறி ஒருவர் பலி

யாழ்.கோப்பாய் கைதடி வீதியில் மோட்டார் சைக்கிளில் பணித்தவருடன் பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளானதில் வயோதிபர் ஒருவர் தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் கைதடி வீதியில் உள்ள இராணுவ முகாம் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை இரவு வேளையில் தென்னிலங்கை நிறுவனம் ஒன்றின் பார ஊர்தியுடன் கைதடி வீதி வழியாக சென்று கொண்டிருந்த வேளையிலேயே விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் தலை சிதறி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவத்தில் சபாபதிப்பிள்ளை- இரத்தினகோபால் (வயது 67) என்னும் வல்வென்டித்துறையைச் சேர்ந்த முதியவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்துத் தொடர்பில் மேலும் தெரிய வருவது,

கோப்பாய் கைதடிவீதியில் உள்ள இராணுவ முகாம் முன்பாக இன்றைய தினம் தென்னிலங்கை நிறுவனம் ஒன்றின் பார ஊர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவரே இவ்வாறு தலை சிதறி பரிதாபகரமாக உயிரிழந்தார். கைதடித் திசையில் இருந்து கோப்பாய் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே இவ்வாறு தென்னிலங்கை நிறுவனம் ஒன்றின் பாரா ஊர்தியிலேயே அகப்பட்டு இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துக் குறித்த மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழருவி நிருபர் பகலவன்