ரான்சம்வேரை தடுக்க, ரஷ்ய கிறிஸ்துவ சபையினர் புனித நீர் தெளித்து வழிபாடு

இரண்டு நாட்களில் உலகத்தையே அச்சுறுத்திய ரான்சம்வேர் வைரஸ் ரஷ்ய உள்துறை அமைச்சகத்தில் உள்ள கணினிகளில் தாக்காமல் இருக்க, ரஷ்ய கிறிஸ்துவ சபையில் உள்ள பாதிரியார்களை வைத்து புனித நீரை தெளித்து வழிபாடுகளை நடத்தியுள்ளனர்.

தற்போது இணைய உலகத்தை ரான்சம்வேர் என்ற வைரஸ் தாக்கி வருகிறது. ரான்சம்வேர் என்பது வைரஸை பயன்படுத்தி பணம் பறிக்கும் முறை. அதாவது இந்த வைரஸ் உங்கள் கணினியை தாக்கினால், அதில் உள்ள முக்கியமான டேட்டாக்கள் அனைத்தும் முடக்கப்படும் என்ற செய்தியே இன்று பரபரப்பாக உள்ளது.

இந்நிலையில், ரஷ்ய அரசு, ரான்சம்வேர் வைரஸ் இருந்து டேட்டாக்களை காப்பாற்ற ரஷ்ய கிறிஸ்துவ சபையில் உள்ள பாதிரியார்களை வைத்து புனித நீரை கம்யூட்டர்களில் தெளித்து ரான்சம்வேர் தாக்கக் கூடாது என்று வழிபாடு நடத்தியுள்ளனர். இந்தியாவில்தான் மூடநம்பிகைகள் தலைவிரித்தாடுகிறது என்றால் வெளிநாடுகளிலும் இது போன்று நடத்தப்படுவது வினோதமாக உள்ளது.