பாதத்திலேயே ஒட்டும் காலணி!

காலில் செருப்போ, ஷூவோ போடக்கூடாது என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? வந்துவிட்டது நேக்பிட்.

பாதத்தின் மேல் பிளாஸ்திரி ஒட்டுவதைப் போல நேக்பிட்டை ஒட்டிக்கொள்ளலாம்.

மணல், கரடு முரடான மலை, கொதிக்கும் நடைபாதை போன்றவற்றின் மேல் செருப்பில் கிடைக்கும் பாதுகாப்புடன், நேக்பிட்டை அணிந்து போகலாம் என்கிறது இத்தாலியிலிருந்து இயங்கும் நேக்பிட்டின் இணைய தளம்.

மூன்று வண்ணங்களில், பெரியவர் முதல், குழந்தைகள் வரை பலருக்கேற்ற அளவுகளில் கிடைக்கும் நேக்பிட்டின் விலை, 10 ஜோடிகளுக்கு, 2,200 ரூபாய்.

இது முதல் வாடிக்கையாளர்களுக்கான அறிமுக விலைதானாம்.