சாம்சங் ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு

சாம்சங் நிறுவனத்தின் அண்மைய வெளியீட்டு மாடல் ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.4,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனான கேலக்ஸி S8 பிளஸ் 128 ஜிபி மாடல் விலையில் ரூ.4000 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் இந்தியாவில் வெளியிடப்பட்ட கேலக்ஸி S8 பிளஸ் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ரூ.74,900 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி S8 பிளஸ் தற்சமயம் ரூ.70,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் சிறப்பம்சங்கள்

* 6.2 இன்ச் QHD+1440×2960 ரெசல்யூஷன் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
* கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
* 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் எக்சைனோஸ் பிராசஸர்
* ஆண்ட்ராய்டு நௌக்கட் சார்ந்த டச்விஸ்
* 4ஜி எல்டிஇ
* 12 எம்பி டூயல்-பிக்சல் பிரைமரி கேமரா
* 8 எம்பி செல்ஃபி கேமரா
* 3500 எம்ஏஎச் பேட்டரி
* 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி
* 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி
* மெமரியை நீட்டிக்கும் வசதி

சாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் ஸ்மார்ட்போனுடன் பல்வேறு சாதனங்களும், பிக்ஸ்பி செயற்கை நுண்ணறிவு மென்பொருள் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.