புது வரவு: இந்த ஸ்மார்ட்போனின் எடை தெரியுமா?

ரஷ்யாவைச் சேர்ந்த எலாரி நிறுவனம் உருவாக்கியுள்ள உலகின் மிகச்சிறிய எலாரி நேனோ ஃபோன் C (Elari Nano phone C) மொடல் விற்பனைக்கு வந்துள்ளது

இதன் எடை வெறும் 30 கிராம் மட்டுமே.

மிகவும் வசதியான ஸ்டைலான பட்டன்களுடன், நேர்த்தியான வடிவமைப்பை பெற்றுள்ளது.

எலாரி நேனோ ஃபோன் C அளவு 94.4 மில்லிமீற்றர் நீளமும், 35.85 மில்லிமீற்றர் அகலமும், 7.6 மில்லிமீற்றர் தடிமனும், 30 கிராம் எடையும் கொண்டுள்ளது.

இந்த புதிய வெளியீடு குறித்து எலாரி நேனோ ஃபோன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்த மொபைல் ஒரு ஆண்டி-ஸ்மார்ட்ஃபோன் (anti smart)அதாவது, சமூக வலைதளங்கள், இணையம், போன்றவற்றில் இருந்து விலகி நிற்பவர்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ள அழைப்பு மற்றும் டெக்ஸ்ட் செய்வதற்கான மொபைலாக விளங்கும் என்று கூறியுள்ளது.