ஸ்கைடைவ் செய்த இருவர் பலி!

சிட்னியின் தென்மேற்குப் பகுதியில் skydive செய்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் யார் என்ற அடையாளத்தை பொலிசார் இதுவரை வெளியிடவில்லை.

60 வயதான ஒருவரும் 20 வயதான இன்னொருவரும் Picton என்ற skydive செய்வதற்குப் பிரபலமான இடத்திலிருந்து, இந்த சாகசச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக, Wilton Park Road இலுள்ள ஒரு காணியில் வீழ்ந்ததில் ஏற்பட்ட தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்த விசாரணையினை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.