டான்ஸ் மாஸ்டரின் வலையில் விழுந்த நடிகை?

மும்பையில் இருந்துவந்து, ஒரே படத்திலேயே தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த நடிகை, டான்ஸ் மாஸ்டரின் காதல் வலையில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயம் ரவி ஜோடியாக ‘வனமகன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மும்பை நடிகை.

ஹிந்தி நடிகர் திலீப் குமாரின் பேத்தி இவர். நாகர்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி ஜோடியாக ‘அகில்’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்.

9 வயதில் இருந்தே நடனம் கற்றுவருகிறார் என்றால் மிகையல்ல.

இந்தநிலையில் வனமகன் படத்தில் நடிகையின் அறிமுகப்பாடலே எடுத்துக்காட்டாக விளங்கியது.

அந்தப் பாடலுக்கு நடனம் அமைத்திருந்தவர், பிரபலமான டான்ஸ் மாஸ்டர். அவர் சொன்ன கஷ்டமான மூவ்மெண்ட்களைக் கூட சிங்கிள் டேக்கில் ஓகே பண்ணியதைப் பார்த்து அசந்துவிட்டாராம் மாஸ்டர்.

அதனால்தான், கார்த்தி, விஷாலை வைத்து அவர் இயக்கும் படத்தில் ஹீரோயினாக்கியுள்ளார்.

இப்போதெல்லாம், ‘டான்ஸ் கத்துக்கொடுங்க மாஸ்டர்…’ என அவரையே சுற்றிச் சுற்றி வருகிறார் நடிகை என்று கோடம்பாக்கதில ஒரே பேச்சு..

என்ன தான் நடக்கிறதோ தெரியல்ல..!!