கமலை குஷிப்படுத்திய ஸ்டாலின்!

தனியார் தொலைக்காட்சி நடத்தும் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையிலும் நிகழ்ச்சி தொடர்ந்து பிரபலமாக திரையிடப்பட்டு வருகிறது.

இதனிடையே செய்தியாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த கமல்ஹாசன், தமிழக அரிசியலின் அனைத்து துறைகளிலும் ஊழல் நிரம்பியுள்ளது எனக் குற்றஞ்சாட்டினர்.

கமல்ஹாசன் குற்றச்சாட்டிற்கு ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் முதல் மந்திரிகளால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ‘‘மக்கள் மனதில் உள்ளதையே நடிகர் கமல்ஹாசன் வெளிப்படுத்தியுள்ளார்’’ என தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார்.

கமல்ஹாசன் கருத்தை வரவேற்கும் விதமாக மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைக்கு ட்விட்டர் மூலம் நடிகர் கமல்ஹாசன் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.