கேலக்ஸி ஸ்மாட்போன் புதுவரவு ஆகஸ்டில்!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 8 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி புதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் வெளியிடப்படும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கௌ டாங்சென் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

புதிய ஃபேப்லெட் குறிப்பிட்ட வெளியீட்டு திகதியை குறிப்பிடவில்லை என்றாலும் இந்த சாதனம் ஆகஸ்ட் 23-ம் திகதி நியூ யார்க் நகரில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் இரண்டு பதிப்புகளாக வெளியிடப்பட இருக்கும் கேலக்ஸி நோட் 8 முதற்கட்டமாக அமெரிக்கா, கொரியா மற்றும் லண்டனில் செப்டம்பர் மாத துவக்கத்தில் வெளியிடப்படும் என இதுவரை வெளியாகியுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் புதிய ஃபேப்லெட் அக்டோபர் மாதம் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.