ஆற்றில் மூழ்கி 9 பேர் பலி

அமெரிக்காவின் அரிசோனா ஆற்றில் மூழ்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த பகுதியில் தற்போது கன மழை பெய்து வருகின்றது.

கனமழையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த அனர்த்தத்தின் போது ஒருவர் காணாமல் போன நிலையில் பொது பாதுகாப்புத்துறையின் ஹெலிகொப்டர்களின் உதவியுடன் தேடுதல் பணிகள் தொடர்ந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களுள் 2 சிறுவர்களும் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.

இருப்பினும் உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர் தொடர்பான மேலதிக விபரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.