சிபியின் சாதனை!

சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி, ஆனந்த்ராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சத்யா’. இப்படத்தை ‘சைத்தான்’ படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி வருகிறார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

`சத்யா’ ட்ரைலரை திரையுலக ஜாம்பவான்கள் பலரும் டுவிட்டரில் பாராட்டி உள்ளனர்.

இப்படத்தின் ட்ரைலர் யூடியூப்பில் 1 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது.

இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படம் எதிர்வரும் ஆகஸ்டு மாதம் திரைக்கு வர இருக்கிறது.