இந்திய மீனவர்கள் கைது..!!!

இந்திய மீனவர்கள் நால்வர் காங்கேசன்துறை கடற்படையினரால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்.நெடுந்தீக் கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட வேளையிலேயே நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்திய தமிழகம் இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த நால்வரும் படகொன்றில் நெடுந்தீவுக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட வேளையில், காங்கேசன்துறை கடற்படையினர் கைதுசெய்து, யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் நேற்று ஒப்படைத்தனர்.

நான்கு மீனவர்களையும் யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகள் ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழருவி நிருபர் பகலவன்