வடக்கில் பட்டதாரிகளுக்கு இன்று நியமனம்!

graduation cap diploma isolated on a white background

கணித, விஞ்ஞான பாடங்களிற்கான பட்டதாரிகள் 27 பேருக்கு இன்று நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

வடமாகாண கல்வி அமைச்சில் இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

நியமனக் கடிதங்களை வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

பட்டதாரி நியமனத்திற்காக இடம்பெற்ற நேர்முகத் தேர்வின்போது சான்றிதழ் சமர்ப்பிக்கத் தவறிய நிலையில் காலம் தாழ்த்தி சான்றிதழை வழங்கிய 27 பட்டதாரிகளிற்கே நியமனம் வழங்கி வைக்கப்பட்டன.

வட மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பாடசாலைகளில் நிலவும் கணிதஇ விஞ்ஞான பாடங்களிற்கான வெற்றிடத்திற்கு கடந்த யூன் மாதம் 10ம் திகதி 219பேருக்கு நியமனம் வழங்கப்பட்ட நிலையில் அவர்களில் 181 பேர் தமது கடமையை பொறுப்பேற்றுள்ளனர்.

இந்நிலையில் வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் 418 கணிதம் மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர்களிற்கான வெற்றிடம் காணப்பட்டது. அவ்வாறு காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2017-02-09 அன்று பத்திரிகைகள் மூலம் விண்ணப்பம் கோரப்பட்டிருந்தன.

இதற்காக விண்ணப்பித்த 353 பட்டதாரிகளில் நேர்முகத் தேர்வின்போது 219 பேர் மட்டுமே தகுதியானவர்கள் எனக் கண்டறியப்பட்டனர்.

இருப்பினும் சில பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்குத் தோற்றிய போதும் சான்றிதழ் கைவசம் இன்மை காரணமாக சான்றிதழைச் சமர்ப்பிக்க சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோரியிருந்தனர் .

அக் கோரிக்கையின் பிரகாரம் அவர்களிற்கு மேலும் ஒருமாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு வழங்கிய சந்தர்ப்பத்தின் பிரகாரம் 27 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

செய்தி நிருபர் – பகலவன்