அமைச்சராகிறார் விந்தன்?

வடமாகாண போக்குவரத்து அமைச்சராக என்.விந்தன் கனகரத்தினம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ( ரெலோ) உயர் பீடத்தினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

பரிந்துரைக்கான கடிதம் இன்றைய தினம் கட்சியின் செயலாளர் நாயகத்தினால் வடமாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அக்கட்சியின் உயர்பீடத்தினர் தெரிவித்தனர்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் உயர்மட்ட கலந்துரையாடல் நேற்று வவுனியாவில் நடைபெற்றது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் உயர்மட்ட கலந்துரையாடலின் போது, 8 உறுப்பினர்களும் ஏகமனதாக வடமாகாண சபை உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினருமான என்.விந்தன் கனகரத்தினத்தினை தெரிவு செய்துள்ளனர்.

தெரிவு செய்தமைக்கான கட்சியின் பரிந்துரைக் கடிதத்தினை தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் என்.ஸ்ரீகாந்தா இன்று அல்லது நாளை வடமாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைப்பார் என்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின உயர்மட்டத்தினர் ( ரெலோ) தெரிவித்துள்ளனர்.

செய்தி நிருபர்- பகலவன்