மீசைய முறுக்கு ; எகிறும் எதிர்பார்ப்பு!

ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மீசைய முறுக்கு’.

இப்படத்திற்கு ஆதியே இசையமைத்து, கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி இயக்குகிறார்.

இவருடன் விவேக், நாயகிகள் ஆத்மீகா, மனிஷா மற்றும் விக்னேஷ் காந்த், மா.கா.பா.ஆனந்த், மாளவிகா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் யூடியூப் ஸ்டார்ஸ் பலர் இப்படத்தின் மூலமாக அறிமுகமாகிறார்கள்.

இந்நிலையில் அவர் இயக்கியிருக்கும் படத்திற்கும் ‘மீசைய முறுக்கு’ என்று பெயர் வைத்திருக்கிறார்.

முறுக்கு மீசை இருந்தாலே ஒரு கம்பீரம் தான். அந்த வகையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை ‘மீசைய முறுக்கு’ படம் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.