யாழில் தேனீர் கடைக்குள் புகுந்தது பாரவூர்தி!

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பாரவூர்தி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தேனீர்ச் சாலை ஒன்றினுள் உட்புகுந்துள்ளது.

இச்சம்பவம் நேற்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஆடியபாதம் வீதியிலிருந்து பருத்தித்துறை செல்லும் வீதிக்கு திரும்ப முற்பட்ட பாரவூர்தியே கல்வியங்காட்டுச் சந்தியில் உள்ள தேனீர்சாலை ஒன்றிற்குள் புகுந்தது.

இவ் விபத்தில் பாரிய சேதங்கள் எவையும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.