பைத்தியக்காரி!

என் இதயத்தை எளிதாக நீ தொட்டுச்சென்றதால் இருள் சூழ்ந்து கிடக்கிறது என் இதயம்...!! ஒளியேற்ற வருவாய் என காத்திருந்து காத்திருந்து காணாமல் போய்விட்டேன்..!! உண்மை என்பதை அறியாது தான் இருந்தேன் உணர்த்தி விட்டாய் நீ நான் எவ்வளவு பைத்தியக்காரி என்று..!! -வதனா- புங்குடுதீவு

மறந்துவிட்டாய்..!!

நீ என்னை மறந்து போய்விட்டாய் ஆனால், இறந்து போகாமல் மீண்டும் மீண்டும் மலர்கிறது என் காதல்..!! நீரூற்றி வளர்க்கவில்லை என் காதலை.. கண்ணீர் ஊற்றி வளர்த்ததால் தானோ என்னவோ வாடவில்லை...! -டெனிஷன்- கட்டார்

என் தேசத்தை நினைத்து..!!

தேசத்தை நினைத்து மூச்சும் விடச்சுடுகிறது ஊரை நினைத்து உறக்கமும் தோன்றுதில்லை காலாற நடந்த தெருக்கள் கண்முன்னே விரிகிறது கால்சட்டை கிழிந்தகோலம் அது ஒரு ஆனந்தக்காலம் வளையம் உருட்டி மணல்வீடு கட்டி மண்சோறு சமைத்தது நினைவை விட்டுப்போகாது எழுத ஆயிரம் இருக்கு-- எழுதும்போது விம்மல் எடுத்து அழவேண்டும்போல கிடக்கு கண்ணீர் வடிந்தோடுது நாவறண்டு போகுது நெஞ்சுக்குள் ஏதோ செய்யுது என்...

நத்தையைப் போல்..!!

என் காதல் கோட்டையைக் கட்டியதும் நீ நொருக்கியதும் நீ..!!வாழும்வரை எனக்குள் உன் நினைவுகளைப் புதைத்தவளும் நீ...நத்தை போல் சுமக்கிறேன் உன் நினைவுகளை இறக்கி வைக்க முடியாமல்..!! -ராகவன்- நோர்வே

காயப்படுத்துகிறாய்..!!

உன்னை நேசித்த இதயம் என்றும் தெரிந்தும் என் இதயத்தைக் காயப்படுத்துகிறாய்..!! மனத்தால் உனைத்தாங்கி கவிதையாய் தாலாட்டி, நீ உறங்க நான் கண் விழிக்கிறேன்- ஏனெனில் நான் உன்னைக் காதலிப்பதால்..!

ஆழ் மனதில் நீ..!!

எனை மறந்தது உன் மனம் துடிக்க மறந்ததது என் இதயம் ஆறாத வடுவாய் ஆழப்பதிந்திருக்கும் உன்னை ஆழ் மனதிலிருந்து எப்படியெடுப்பது..!! உன்னால் ஏற்பட்ட காயம் ஆறவுமில்லை.. ஆற்ற நினைக்கவும் இல்லை..!! -கர்ணன்- சுவிட்சர்லாந்து

சொப்பனத்தில்..!!

விழாத கண்ணீர் என் நெஞ்சை நனைக்க கூவிய சேவலும் அடித்த அலாரமும் உரைத்தது போதும் கனவென்று… மீண்டும் மௌனித்தது வெம்பிய மனம்… -வசீகரன்- நோர்வே

கண்ணீரில் மலர்ந்த காதல் பூ..!!

நீ உதிர்த்த வார்த்தைகளை காற்றுத் திரும்ப பெற்றிடுமோ? முத்தம் எழுதிய கவிதையெல்லாம் முழுதும் அழிந்திடுமா..? என் விழிகள் சிந்தும் பனித்துளிகளில் மலர்ந்த காதல் பூவில் பறித்துக் கொண்டேன் கவிதைகளை..!! -ராஜேஸ்- இத்தாலி

நரம்புகள் வெடித்துச் சிதறாதோ?

ஆசையாய் பேசிட வார்த்தைகள் அலை மோதும் அருகிலே பார்த்ததும் மௌனங்கள் பேசும்..!! காதலன் கையில் சிறை காணும் நேரம் உள்ளூர பொங்கும் இன்பத்தில் நரம்புகள் வெடித்துச் சிதறாதோ?-அஜிதா- மட்டக்களப்பு

உதிராமல் பார்த்திடு..!!

உன்னைப் பார்த்த பின் உறைவிடம் மறந்து உறைந்து போனேன் உன் உள்ளத்தில்..!!உயிர்க்கிறது உன்னிடத்தில் என் காதல் .. உதிராமல் பார்த்திடு.. இல்லையேல் உயிர் துறந்து விடுவேன்!! -நிர்மல்- யாழ்ப்பாணம்

சமீபத்திய செய்திகள்

மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாதவர்கள் பதவி விலகுங்கள்!

தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஒரே குடையின் கீழ்செயற்பட வேண்டுமென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் ஊடகவியலாளர் தராகியின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தயாராக இருக்கின்றதாக அக்கட்சியின்...

அதிகம் பார்க்கப்பட்டவை

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் இன்று திடீர் திருப்பம்!!

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் இன்று திடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது இந்த கொலையில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள 10 ஆவது மற்றும் 12 சந்தேகநபர்களை விடுதலைசெய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம்...